×

அரிசி கொம்பன் யானை நலமாக உள்ளது:சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில்

சென்னை: அரிசிக்கொம்பன் யானை நலமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதிலளித்துள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்தின் கம்பம் பகுதிக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் யானை அந்நகரத்திற்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.  மேலும் யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இறுதியாக வனத்துறையினர் யானையை பிடித்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டது.

அங்கு போதுமான உணவு, தண்ணீர் இல்லை என்பதனால் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட கோரி கேரளாவை சேர்ந்த ரெபேக்கா ஜோசப் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் வரத சக்ரவர்த்தி அமர்வுக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது களக்காடு முண்டன்துறையில் யானை நலமாக உள்ளதாகவும், அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில் யானையை எங்கு விட வேண்டும் என முடிவு செய்யவேண்டியது வனத்துறையினரே நிபுணர்த்துவம் பெற்றவர்கள் எனக் கூறி வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தனர். அப்போது அந்த வழக்கில் அரிசி கொம்பனை ரவுடி போல் சித்தரித்து செய்தி வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்திய பிரஸ் கவுன்சில் மற்றும் ஊடகங்களை எதிர் மனுதாரர்களாக சேர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என்று கூறி அந்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post அரிசி கொம்பன் யானை நலமாக உள்ளது:சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் appeared first on Dinakaran.

Tags : Department of Forest ,Chennai High Court ,Chennai ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...